கள்ளக்குறிச்சி: நகரத்தில் மினி பேருந்துக்கு தடை கோரி மனு.
கள்ளக்குறிச்சி நகரத்தில் இயங்கி வரும் மினி பேருந்துகள் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வரை செல்வதால் ஆட்டோ ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்கள்;
கள்ளக்குறிச்சி நகரத்தில் இயங்கி வரும் அனைத்து மினி பேருந்துகளும் அரசு மருத்துவக் கல்லூரி வரை சென்று வருவதால் அங்குள்ள ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் உள்ளதால் அங்கு செல்லும் மினி பேருந்துகளை தடை செய்யுமாறு மாவட்ட ஆட்சியரிடம் சிஐடியு ஆட்டோ சங்கம் மாவட்டச் செயலாளர் ஏழுமலை தலைமையில் கோரிக்கை மனு கொடுத்த போது எடுத்த படம் உடன் நிர்வாகிகள்