அரசு மகளிர் பள்ளி மாணவிகள் இருவர் அறிவயல் மாநாட்டில் சாதனை
குமாரபாளையம் அரசு மகளிர் பள்ளி மாணவிகள் இருவர் அறிவியல் மாநாட்டில் சாதனை படைத்துள்ளனர்.;
குமாரபாளையம் அரசு மகளிர் பள்ளி மாணவிகள் இருவர் அறிவியல் மாநாட்டில் சாதனை படைத்துள்ளனர். 34-வது குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் குமாரபாளையம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சௌபரணிதா, சுபிக்ஷா ஆகிய இருவரும் பங்கேற்றனர். ஆங்கில மீடியம் படிக்கும் இவர்கள் நீர் மேலாண்மை எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் ஆய்வுக் கட்டுரை சமர்பித்தனர். இவர்களது ஆய்வுக்கட்டுரை தேர்வு செய்யப்பட்டு, இளநிலை ஆங்கிலப் பிரிவில் மாநில அளவில் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளியின் சார்பாக தலைமை ஆசிரியை காந்தரூபி, ஆசிரிய பெருமக்கள், பள்ளி மேலாண்மைக் குழுவினர் உள்பட பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.