வெற்றி விநாயகர் கோவில். மண்டலாபிஷேக பூஜை
குமாரபாளையம் அருகே சானார்பாளையம் வெற்றி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி மண்டலாபிஷேக பூஜைகள் தினசரி நடந்து வருகிறது;
குமாரபாளையம் அருகே சானார்பாளையம் வெற்றி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா டிச.1இல் நடந்தது. இதன் மண்டலாபிஷேக பூஜைகள் தினசரி நடந்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக நேற்று நடந்த மண்டலாபிஷேக பூஜையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. சிறப்பு அழைப்பாளராக குமாரபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி தன் குடும்பத்தாருடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். பக்தர்கள் பெருமளவில் இந்த பூஜையில் பங்கேற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.