மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உடன் திமுக எம்பி திடீர் சந்திப்பு...!
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உடன் திமுக எம்பி திடீர் சந்திப்பு!;
கோயம்புத்தூர்–ஊட்டி NH 181 சாலை மிக மோசமான நிலையில் உள்ளதையொட்டி, பயணிகளின் பாதுகாப்பிற்காக ரூ-8698.88 லட்சம் மதிப்பிலான பராமரிப்பு பணிக்கான அனுமதியை ஒன்றிய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரிக்கையை, முன்னாள் ஒன்றியஅமைச்சரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசா அவர்கள் மாண்புமிகு ஒன்றிய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி அவர்களைநேரில் சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தார்.