கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அரசுப்பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
எம்.எல்.ஏ சிவகாமசுந்தரி வழங்கினார்;
கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய பகுதியில் உள்ள அரசுப்பள்ளிகளில் 198 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை எம்எல்ஏ சிவகாமசுந்தரி வழங்கினார். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 104 மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதி வண்டி கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி. தலைமையில் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) சத்தியமூர்த்தி முன்னிலையில் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியைராதிகா வரவேற்று பேசினார், பட்டதாரி தமிழ் ஆசிரியர் மணிகண்டன் நிகழ்ச்சிbதொகுப்பு வழங்கினார். இதில் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் (பொ) கிருஷ்ணன்,மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ரவி ராஜா, பேரூர் கழகச் செயலாளர் சசிகுமார், பள்ளி மேலாண்மை குழு தலைவர் அபிநயா, பேரூராட்சி கவுன்சிலர்கள் இளங்கோ, வடிவேல் லோகநாதன், பொன்மனராஜ், கழக நிர்வாகிகள் பரமசிவம், சிந்துஜா பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக உதவி தலைமை ஆசிரியர் நன்றி கூறினார். அதேபோல் பழைய ஜெயங்கொண்டம் அரசி னர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 94 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி எம்.எல்.ஏ சிவகாமசுந்தரி தலைமையில் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) சத்தியமூர்த்தி முன்னிலையில் வழங்கப்பட்டது.பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகம் வரவேற்று பேசினார்.நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ரவி ராஜா, பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி தலைவர் சௌந்தர பிரியா பேரூர் கழக திமுக செயலாளர் மோகன்ராஜ் பேரூராட்சி செயல் அலுவலர் (பொ) தேவராஜ், கழக நிர்வாகிகள் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்