கரூர் மாவட்டம்,கிருஷ்ணராயபுரம் தாலுக்கா சிந்தலவாடி பிரிவு ரோடு அருகே பொதுமக்களை ஏமாற்றி ஆசைவார்த்தை கூறி லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற லாலாபேட்டை போலீசார் லாட்டரி விற்ற கம்மநல்லூரை சேர்ந்த ராஜா (36), லாலாபேட்டை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (47) ஆகிய இரண்டு பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.