கிருஷ்ணராயபுரம் தாலுக்கா லாலாபேட்டை ஆண்டியப்பன் நகர் அருகே லாலாபேட்டை போலீசார் வாகன சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது அரசு அனுமதி இன்றி மினி வேனில் ஆற்று மணலை மூட்டைகளாக கடத்தி வந்தது தெரியவந்தது. பிறகு மணல் கடத்தலில் ஈடுபட்ட மேட்டு திருக்காம்புலியூர் பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன் மகன் பாலகுமார் (26) என்ற கொத்தனார் தொழிலாளி மீது லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர்.