புதிய வழித்தடம் பேருந்தை ரிஷிவந்தியம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்....

கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து தினமும் மூன்று மணியளவில் தடம்எண், 22,43 ஆகிய பேருந்துகளை ரிஷிவந்தியம் தொகுதி பகண்டை கூட்ரோடுவரை நீட்டிக்கப்பட்ட வழித்தடம் பேருந்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார் ரிஷிவந்தியம் எம் எல் ஏ;

Update: 2025-12-12 07:00 GMT
கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் மதியம் 3 மணியளவில் தடம் எண் 22 என்ற அரசு பஸ்சும், மாலை 6.10 மணியளவில் தடம் எண் 43 என்ற பஸ்சும் புறப்பட்டு தண்டலை, சூளாங்குறிச்சி, பழையசிறுவங்கூர் வழியாக மையனுார் வரை செல்கிறது. இதை பகண்டைகூட்ரோடு வரை இயக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், இரண்டு பஸ்களின் வழித்தடமும் பகண்டைகூட்ரோடு வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், துவக்க விழா நடந்தது. நீட்டிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படும் புதிய அரசு பஸ்களை வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Similar News