ராமநாதபுரம் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

சாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியருக்கு 10.5% இட ஒதுக்கீடு அனைத்து ஜாதியினருக்கும் சமூக நீதி கிடைக்க பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது;

Update: 2025-12-12 10:45 GMT
.ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில், மாவட்ட செயலாளர் சந்தானதாஸ் தலைமையில் மாவட்டத் துணைத் தலைவர் முகமது அலி வரவேற்புரை நிகழ்த்த மாநில சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் சகுபர் சாதிக் மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகம் மாவட்ட தலைவர் வெங்கடேசன், மாவட்ட ஊடகப் பேரவை செயலாளர் தொண்டி ஆனந்தன் மாவட்ட அமைப்பு தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இவர்களது கோரிக்கைகளான சாதி வாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் 10.5% வன்னியர் கான இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் அனைத்து ஜாதியினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் ஏராளமான பெண்கள் உட்பட பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பு செயலாளர் பாண்டி திருவாடானை ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ் வன்னியர் சங்க மாவட்ட தலைவர் எங்க ராஜா மற்றும் பலரும் கலந்து கொண்டனர் இறுதியாக தொண்டி பேரூர் கழக செயலாளர் ஹரிஹரசுதன் நன்றி தெரிவித்தார்.

Similar News