தனியார் கல்லூரி மாணவி மாயம்
குமாரபாளையம் தனியார் கல்லூரி மாணவி மாயமானார்.;
ஈரோடு நம்பியூரை சேர்ந்தவர் தனலட்சுமி, 41. இவரது இரண்டாவது மகள் காவ்யா, 17. இவர் குமாரபாளையம் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்றுமுன்தினம் காலை கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. கல்லூரியில் கேட்டதற்கு மாலை கல்லூரி முடிந்து, கல்லூரி பேருந்தில் ஏறவில்லை வென்று கூறியுள்ளனர். இது குறித்து, தனலட்சுமி குமாரபாளையம் போலீசில் புகார் செய்து, காணாமல் போன தன் மகள் காவ்யாவு கண்டிபிடித்து தருமாறு புகார் கொடுத்துள்ளார். இதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து, காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.