இறந்தவர்கள் பிளெக்ஸ் சாலை நடுவில் வைக்க கூடாது என போலீசார் எச்சரிக்கை

குமாரபாளையத்தில் இறந்தவர்கள் பிளெக்ஸ் சாலை நடுவில் வைக்கக் கூடாது என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2025-12-13 13:24 GMT
குமாரபாளையத்தில் இறந்தவர்கள் பிளெக்ஸ் சாலை நடுவில் வைக்கக் கூடாது என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் தவமணி கூறியதாவது: குமாரபாளையம் நகர் பகுதியில் பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு, கத்தேரி பிரிவு, பகுதிகளில் மறைந்தவர்களின் துக்க நிகழ்ச்சிக்காக வைக்கப்படும் பிளக்ஸ் சம்பந்தமான காவல்துறையின் அன்பான வேண்டுகோள்: தங்கள் குடும்பத்தில் ஒருவர் மறைந்து விட்டால் அவர் மறைவையொட்டி வைக்கப்படும் பிளக்ஸ் மற்றும் பேனர்கள் சாலையின் ஓரமாக வைக்க அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஏனென்றால் வைக்கும் பிளக்ஸ் ஆனது, பிரிவு ரோட்டின் நடுப்பகுதியில் வைக்கப்படுவதால், காற்று அடிக்கும் பொழுது அவை கழன்று , அவ்வழியாக செல்வோர் மீது மோதி விபத்து ஏற்பட்டு, அதனால் பாதிக்கப்பட்டவர் குடும்பம் மிகுந்த வேதனை அடைகிறது. ஆகையால் ரோட்டில் நடுப் பிரிவு பகுதியில் வைக்க வேண்டாம் ஓரமாக வைத்துகொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதற்கு பிறகு தொடர்ந்து வைத்தால் வழக்குப் பதிவு செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Similar News