மாயனூரில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குசாவடி பிரசாரம்

எம்எல்ஏ சிவகாமசுந்தரி கலந்து கொண்டார்;

Update: 2025-12-14 07:16 GMT
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றியத்தில் உள்ள மாயனூரில் பூத்எண் 17 பகுதிகளில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குசாவடி குறித்து வீடு வீடாக சென்று எம்எல்ஏ சிவகாமசுந்தரி பிரசாரம் செய்தார். முன்னதாக பூத் எண் 117ல் பாக முகவர்கள் பிஎல்சி, பிடிஏ மற்றும் கழக நிர்வாகிகளிடம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் திமுக அரசின் சாதனைகள் குறித்து பொது மக்களிடம் வீடு வீடாக சென்று எடுத்துரைத்து 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சி அமைத்திட அனைவரும் திறன்பட செயல்பட வேண்டும் எனதீர்மானிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாயனூர் பகுதியில் உள்ள பூத் எண் 117ல் வீடு வீடாக சென்று சாதனை பிரசுரங்கள் வழங்கினர். இதில் கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ரவிராஜா,ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மோகன்குமார், துணை அமைப்பாளர் பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News