கடவூர் அருகே தரகம்பட்டியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது

கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்;

Update: 2025-12-14 08:13 GMT
கரூர் மாவட்டம்,கடவூர் அருகே தரகம்பட்டியில் நடந்த நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமில் 2,075 பேர் சிகிச்சை பெற்ற நிலையில் 100க்கும் மேற்பட்டோர் ரத்தbபரிசோதனைகள் செய்து கொண்டனர் தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதல் படி கடவூர் வட்டாரம் தாகம்பட்டியில் நலம் காக்கும் ண்டாவின் சிறப்பு மருத்துவமுகாம் கடவூர் வட்டார மருத்துவ அலுவலர் பிரசன்னா தலைமையில் நடந்தது மருத்துவ முகாமை கிருஷ்ணராயபுரம் எம்.எம்.ஏ சிவகாமசுந்தரி தொடங்கி வைத்து மருத்துவர்களிடம் சிகிச்சை அளிக்கும் முறைகளை கேட்டறிந்து,பொதுமக்களிடம் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமின் நன்மைகளை எடுத்து கூறினார். இம்முகாமில் 2,035 நபர்களுக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு, 1300க்கும் மேற்பட்டோருக்கு ரத்த அழுத்தம்,சர்க்கரை அளவு, சிறுநீர் பரிசோதனைகளை செய்தனர் அனைத்து பரிசோதனைகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டது. இதன் பரிசோதனை முடிவுகள் அவரவர்களின் செல்போன் எண்ணிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 17 சிறப்பு மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர்.

Similar News