நாமக்கல் கிழக்கு மாவட்ட தவெக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பொதுச் செயலாளர் புஷ்சி ஆனந்த் செங்கோட்டையன் பங்கேற்பு
எங்கள் கட்சி வேட்பாளர்களை கட்சியின் தலைவர் தளபதி தான் அறிவிப்பார் பத்திரிகைகள்சேனல்கள் youtube களில்வேறு மாதிரி செய்திகள் வெளியிடாதீர்கள் நாமக்கல் கிழக்கு மாவட்ட தவெகநிர்வாகிகள ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் பேச்ச;
தமிழக வெற்றி கழகத்தின் திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி ஆலோசனைக் கூட்டம் திருச்செங்கோடு சூரியம்பாளையம் செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமை வகித்தார். கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் மாநில அமைப்பு செயலாளர் செங்கோட்டையன் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் வரவேற்று பேசினார். திருச்செங்கோடு தவெக ஆலோசனை கூட்டத்தில் செங்கோட்டையன் பேசியதாவது எங்கள் குல தெய்வமே திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் தான். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களுடன் இருந்து தற்போது 3வது முறையாக ஆட்சியில் அமர உள்ள தளபதி விஜய்யுடன் இணைந்துள்ளேன். அவர் மட்டும் தான் இளைஞர்களின் எழுச்சியுடன் ஆட்சி அமைக்க முடியும். இரண்டு கட்சிகள் தான் ஆள வேண்டுமா? புதியவர்கள் ஆள கூடாதா? குழந்தையை தட்டி எழுப்பினால் கூட தளபதி விஜய் பெயரை சொல்லும். 2026 ல் தவெக வரலாறு படைக்கும். கூட்டணியை வரவேற்கிறோம் ஆனால் விஜய் அவர்களை முதல்வராக ஏற்று கொள்பவர்களை மட்டுமே நாங்கள் ஏற்று கொள்வோம். ஒரு இயக்கம் நன்றாக வளர வேண்டும் என்றால் அதற்கு நல்ல தலைமை வேண்டும் அது விஜயால் மட்டுமே முடியும். 50 ஆண்டுகளாக ஒரே இயக்கத்திலும் 9 முறை எம்எல்ஏ வாகவும் பணியாற்றி இருக்கிறேன். சமுதாய முன்னேற்றத்திற்கு விஜய் முக்கிய பங்காக இருப்பார் அதற்காக தான் இங்கு இருக்கிறேன் இந்த இளைஞர் பட்டாளத்தை வெல்வதற்கு எந்த சக்தியாலும் முடியாது. தமிழக மண்ணில் இவரை விட்டால் யாரும் இல்லை.. பூத் கமிட்டி அமைத்து மக்களிடம் சென்று சுழன்று பணியாற்றுங்கள் வெற்றி வாகை சூட தயாராகுங்கள். வெற்றிவாய்பு எளிதானது அல்ல. எதிரில் உள்ளவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.என்று பேசினார் தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் பேசியதாவது. தலைவர் விஜய் என்ற பெயரை சொன்னாலே லட்சம் பேர் கூடும ஒரே கட்சி தவெக தான். மற்ற கட்சியினர் 500ரூபாய் கொடுத்து கூட்டம் கூட்டுவார்கள். வரும் 18ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் விஜய் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் செங்கோட்டையன் கலக்க போகிறார். மக்கள் எங்களுக்கு ஓட்டு போட தயார். செங்கோட்டையனுக்கு உரிய மரியாதையை கொடுப்போம். 234 தொகுதி வேட்பாளர்களையும் தலைவர் விஜய் மட்டும் தான் அறிவிப்பார். 2026 ல் தலைவர் விஜய் முதல்வர் ஆவது உறுதி.32ஆண்டுகளாக சினிமாவில் இருந்து உச்சத்தை விட்டு மக்களுக்காக வந்தவர் விஜய். மக்கள் இயக்கமாக இருந்த போதில் இருந்து மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவது தவெக மட்டும் தான். மக்களுக்காக உழைத்து கொண்டிருக்கும் ஒரே தலைவர் விஜய் மட்டும் தான் இன்று ஆட்சியாளர்கள் மாறி மாறி மக்களை ஏமாற்றியதை மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர். ஆட்சியில் உள்ளவர்கள் தைரியம் இருந்தால் நாங்கள் நடத்துவது போல மாநாடு நடத்தி காட்டுங்கள் இரும்பு மனிதராக நமது தளபதி விஜய் புறப்பட்டுள்ளார். தளபதி விஜய் யின் ஆட்சிக்கு நாம் தயாராக இருப்போம். இது வெறும் தேர்தல் அல்ல தமிழகத்தின் தலை எழுத்தை மாற்ற நடக்கும் போர் தமிழக வெற்றி கழகத்தின் கோட்டையாக மாற்றத்தான் செங்கோட்டையன் நமது மேடையில் அமர்ந்திருக்கிறார் வெறும் அரசியல் பேச வரவில்லை விசைத்தறிகளின் சத்தம் திருச்செங்கோட்டில் இதயத்துடிப்பாக இருந்தது இன்று நூல் விலை ஏற்றம் வரி அதிகரிப்பு மின் கட்டண உயர்வு இதனால் பல தறிகள் ஓடாமல் நிற்கின்றன நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அனைவரையும் வாழவைப்போம் என்று சொன்னார்கள் செய்தார்களா . நாமக்கல் மாவட்டம் லாரி போக்குவரத்து துறை லாரி பாடி பில்டிங்கிற்கு பேர் போன இடம்.தற்போது தொழில் நசிந்து வருகிறது 2026 தளபதி விஜய் ஆட்சி வந்த உடன் இவை சீர்படுத்தப்படும் ஆட்சிக்கு வந்தால் சுங்க சாவடி இருக்காது என்று சொன்னார்களே செய்தார்களா அருமையான காவேரி நீர் அருகில் இருந்தும் பாதிக்கப்படுகிறது . சாயக்கழிவு நீரால் விவசாயம் அழிந்து வருகிறது 50 ஆண்டுகளாக ஏன் முடியவில்லை நாங்கள்ஆட்சிக்கு வந்தால் இயற்கை வளங்களை பாதுகாப்போம் என்று சொன்னார்கள்செய்தார்களா நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இவைகள் செய்யப்படும் எந்த சான்றிதழ் வாங்கவும் லஞ்சம் இல்லாமல் சான்றிதழ் பெற வழிவகை செய்வோம் மக்கள் ஓட்டு போடத் தயார் மக்கள் எந்த கட்சியையும் நம்பவில்லைஎங்களுடன் கூட்டணி வைக்க பலரும் தயாராக இருக்கிறார்கள் வளரும் எங்களுடன் வர தயாராக இருக்கிறார்கள் அதிமுகவிலிருந்து பலர் வர இருக்கிறார்கள் மக்களை சந்தித்து நமது வேட்பாளருக்கு வெற்றியை தேடி கொடுங்கள். விரைவில் நமது கட்சி சின்னம் உறுதியாகி விடும் . நமது சின்னத்தை விரைவாக மக்களிடம் சென்று சேர்த்துவிடலாம். நீங்கள் ஒற்றுமையாக இருந்து செயல்படுங்கள். என பேசினார்.தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு வெற்றிக் கழக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் கூறியதாவது 234 தொகுதிகளுக்கும் தலைவர் விஜய் தான் வேட்பாளர்களை அறிவிப்பார்... வேட்பாளர் விருப்ப மனு பட்டியல் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும்... கொள்கை இல்லை என்று சொல்பவர்களை நாம் எப்படி சொல்வது தூங்குபவர்களை எழுப்பலாம் தூங்குவது போல நடிப்பவர்களை எழுப்ப முடியாது தமிழக வெற்றி கழகம் எப்போதும் மாத சார்பற்ற சமூக நல்லிணக்க கொள்கையை உள்ள கட்சி புஷ்சி ஆனந்த் படங்கள் மட்டுமே பேனர்களில் உள்ளதாள் தவெக வில் வாரிசு அரசியல் நடக்கிறதா ஏன் செங்கோட்டையன் படம் இடம் பெற வில்லை என்ற கேள்விக்கு? கடைசி நேரத்தில் செங்கோட்டையன் வருகை உறுதி செய்யப்பட்டதால் அவரது படங்கள் பிளக்ஸ்களில் வைக்க முடியவில்லை இதில் வாரிசு அரசியலுக்கு எந்த சம்பந்தமும் இல்லை அவர் 25 ஆண்டுகளாக தலைவருடன் இருப்பவர்என்றார். தளபதியை முதல்வராக ஏற்கும் கட்சியுடன் கூட்டணி அமையும்... அரசியல் கட்சிகளை சாதாரணமாக எண்ணி விடாதீர்கள் தேர்தல் நடக்க இன்னும் காலம் இருக்கிறது சரியான நேரத்தில் சரியான கூட்டணிகள் அமையும் என அருண் ராஜ் தெரிவித்தார்