திருச்செங்கோட்டில்மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றும்ஒன்றிய அரசின் நடவடிக்கையை கண்டித்துதமிழ் நாடு விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர்ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றும்ஒன்றிய அரசின் நடவடிக்கையை கண்டித்தும், பெயர் மாற்றம் செய்யக்கூடாது என வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.;

Update: 2025-12-15 08:14 GMT
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரைபுஜ்ஜிய பாபு கிராமின் ரோஜ்கார் யோஜனா என பெயர் மாற்றம் செய்வதை கண்டித்தும்,பெயர் மாற்றம் செய் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திட்டத்தின் பெயரை மாற்றக்கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர். 100 நாள் வேலை திட்டத்தை நிறுத்துவதற்கு உண்டான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்து வருகிறது எனவும் அதற்கு முதல் கட்டமாக பெயர் மாற்ற நடவடிக்கை எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது என போராட்டத்தின் போது வலியுறுத்தப் பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சி.ஜெயராமன் தலைமை வகித்தார் டி.சிவக்குமார், சங்கர், அழகுராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட செயலாளர் எஸ்.ராமகிருஷ்ணன்சிறப்புரையாற்றினார்.ஆர்பாட்டத்தின் நோக்கம் குறித்து சிபிஐ மாவட்ட குழு உறுப்பினர் டி.கே.சுப்பிரமணி, நகரச் செயலாளர் எஸ்.சுகுமார், நகர குழு உறுப்பினர்கள் எஸ்.மன்னாதன், சி.முருகேசன்Ex.M.C எஸ்.தண்டபாணி, எம்.முனுசாமி ஆகியோர் பேசினார்கள் ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பின் செய்தியாளர் களிடம் பேசிய தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜெயராம் கூறியதாவது 20 ஆண்டுகளுக்கு முன்பு போராடி பெற்ற இந்த 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை பாஜக அரசு ஒடுக்கி வருகிறது. தற்போது மகாத்மா காந்தி பெயரை மாற்ற நினைக்கிறது. இதனை கண்டித்து நாடு முழுவதும் இன்று விவசாய சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்று கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் விவசாய சங்கத்தினர் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்

Similar News