விஜயின் கரங்களை வலுப்படுத்தி வெற்றி வாகையை சூடுவோம்: நாஞ்சில் சம்பத்

குடும்ப அரசியலை எதிர்த்து நாகரீக அரசியல் செய்கின்ற தலைவர் விஜயின் கரங்களை வலுப்படுத்தி வெற்றி வாகையை சூடுவோம் என தவெக கொள்கை பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.;

Update: 2025-12-15 10:54 GMT

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள மாம்பாக்கம் கூட்ரோடு பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டம், திமிரி கிழக்கு ஒன்றியத்தின் சார்பில், திமிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார் தலைமையில் கொள்கை விளக்க பொதுகூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ஒன்றிய கழக செயலர்கள் சரவணன், மணிகண்டன், இணை செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் சீனிவாசன் ஆகியோர் வரவேற்றனர். இதில், ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழக செயலாளர் விஜய்மோகன், கழக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத், கழக கொள்கை பரப்பு இணை செயலாளர் லயோலா மணி, தாஹிராபானு ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னதாக கொள்கை தலைவர்களான அம்பேத்கார், பெரியார், ஆகியர் தலைவர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் பேசிய கழக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத், கடந்த 6 ஆண்டுகாலமாக ஒரு இயக்கமாக இங்கி வந்த நான் தற்போது தவெக வில் இணைத்துக் கொண்டு பேசி வருகிறேன். அண்ணாவின் வெற்றியை படைக்க காத்துக்கொண்டு இருக்கும் விஜய்க்கு வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன். அறிவாலயத்திலிருந்து சொல்கிற வார்த்தை நேற்று வந்தவர்கள் எல்லாம் முதல்வர் என கனவு காண்கிறார்கள் ஆனால் விஜய் 20 ஆண்டுகளுக்கு முன்னே மக்களுக்கு சேவை செய்தவர் என சுட்டி காட்டி பேசியதுடன் உங்களுக்கு வாங்க தான் தெரியுமே தவிர கொடுக்க தெரியாது என திமுக வை மறைமுகமாக தாக்கினார். திருவண்ணாமலையில் கூட்டம் முடிந்து செல்கின்றனர் ஆனால் மாம்பாக்கத்தில் கூட்டம் நடந்துக் கொண்டு இருக்கிறது. இனி உங்களின் ஆட்டம் முடிய போகிறது. தற்குரி நாளைய மாற்றத்தின் குறியாக மாற போகிறது என அடுக்கு மொழியில் பேசினார். பெரியாரை திட்டமிட்டு காவி கொடிகள் அசிங்கப்படுத்துக்கின்ற சூழலில் காங்கிரஸ்காரர்கள் மறந்து போன காமராஜர், சபிக்கப்பட்ட மக்களுக்கு தலைவனாக அரசியலமைப்பு எழுதிய அம்பேத்கர், ராணிவேல் நாச்சியார், அஞ்சலி அம்மாள் ஆகிய தலைவர்களை ஏற்றவர் தான் தலைவர் விஜய் என்று பெருமையாக பேசினார். எல்லா இடத்திலும் கலைஞர் என பெயர் சூட்டி வைத்துள்ளனர். ஆனால் விஜய் ஒரு ராஜ தந்திரி என சொல்வேன் ஏன்என்றால் 45 ஆண்டுகால அரசியலில் கோலோச்சிய செங்கோட்டையனை உதயநிதி பிறந்தநாளில் இணைத்தார், அதேபோல் ஜெயலலிதா நினைவு தினத்தில் நெஞ்சில் சம்பத் இணைத்துக் கொண்டடேன் அதனால் இரண்டு முக்கிய நிகழ்வுகளை தொலைக்காட்சியில் வந்ததே தவிர உதயநிதி பிறந்த செய்தியும், ஜெயலலிதா நினைவு தினத்தையும் செய்தியில் வரவில்லை என பேசினார். நாளைக்கு தேர்தல் வருவதாலே பொங்கல் பரிசு 5 ஆயிரம் வழங்க உள்ளனர் ஏன் கடந்த ஆண்டு பொங்கலுக்கு கொடுத்து இருக்கலாமே என கேள்வி எழுப்பினார். முஸ்லீம் வளையல் வியாபாரியின் ஆட்டு குட்டியின் வளர்த்த குட்டி கதையை சொல்லி திமுக வை ஆட்சியில் அகற்ற வேண்டும் என பேசினார். வெளிநாட்டில் முதலீடு ஈர்ப்பது குறித்தான ஊழலை நானே வெளியிடுவேன் மக்கள் வரி பணத்தில் மஞ்சள் குளிக்கின்ற திமுகவை ஒழிக்க வேண்டும். குடும்ப அரசியலை செய்கின்ற அரசியலை எதிர்த்து நாகரிக அரசியலை செய்கின்ற விஜய் கரங்கலை வலுப்படுத்தி வெற்றி பெறுவோம் என பேசினார்.

Similar News