குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம்!!
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை சார்பில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.;
By : King 24x7 Desk
Update: 2025-12-15 13:26 GMT
தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் புதுக்கோட்டை விஜயா தலைமையில் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை சார்பில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. உடன் தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர்கள் முனைவர் கசிமிர் ராஜ் மரு.மோனா மட்டில்டா பாஸ்கர் மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சிதபிரியா மற்றும் பலர் உள்ளனர்.