தேமுதிக மாநாடு குறித்து கரூர் மாநகரில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
தேமுதிக மாநாடு குறித்து கரூர் மாநகரில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.;
தேமுதிக மாநாடு குறித்து கரூர் மாநகரில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ரவிஸ் மஹாலில் கரூர் மாநகர மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் மக்கள் உரிமை மீட்பு மாநாடு மற்றும் குருபூஜை விழா சம்பந்தமாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மாநகர மாவட்ட செயலாளர் கலையரசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாநில தொழிற்சங்க அணி பொன். இளங்கோ, பாலு, மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன், மத்திய நகரம் அரிப் ராஜா, பஞ்சர் ரவி, வீரம்மாள் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர். இதில் 60க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று மாநாட்டில் கலந்து கொள்வது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநகர ஒன்றிய நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.