திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில் புதிய வாக்காளர்கள் சேர்ப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில் புதிய வாக்காளர்கள் சேர்ப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் துர்கா மூர்த்திகலந்து கொண்டு வாக்காளர் படிவங்களை பெற்றார். இளைய சமூகத்தினர் வாக்காளர்களாக பதிவு செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வுநிகழ்ச்சிகள் நடைபெற்றது.;

Update: 2025-12-17 09:07 GMT
தமிழ்நாட்டில் தற்போது எஸ் ஐ ஆர் எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணியை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் 1.1.2026 அன்று 18 வயது பூர்த்தி யானவர்களுக்கு படிவம் ஆறு வழங்கப் பட்டு புதிய வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குதிருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலரும் வருவாய் கோட்டாட்சியருமான லெனின் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் துர்கா மூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும்அதற்கு வாக்காளர்களாக இளைய சமூகத்தினர் தங்களை பதிவு செய்ய வேண்டியதன் அவசியம் என்ன என்பது குறித்தும் எடுத்து கூறினார். வாக்களிப்பது மட்டுமல்ல ஜனநாயகத்தில் பங்கேற்பதும் நமது கடமை என எடுத்து கூறினார். புதிய வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ள வழங்கப்பட்ட ஆறாம் எண் படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்கப்பட்டது. தகுதியான வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் எனமாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்தார். முறைப்படுத்தப்பட்ட வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வாக்களிக்க வேண்டிய அவசியம் குறித்தும் புதிய வாக்காளர்கள் சேர்ப்பது குறித்தும் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு நாடகங்கள், மேடைப்பேச்சுகள் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டனர். என் வாக்கு என் உரிமை என்ற முழக்கத்தை அனைத்து மாணவிகளும் எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் லெனின் திருச்செங்கோடு வட்டாட்சியர் கிருஷ்ணவேணி கல்லூரி முதல்வர் பேபி சகிலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News