தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய அமைச்சர் மா. மதிவேந்தன்.

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.;

Update: 2025-12-20 16:51 GMT
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் முத்தாயம்மாள் நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன்‌ , மாவட்ட ஆட்சியர் தலைமையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் முன்னிலையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது, நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் இன்றைய தினம் மாபெரும் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் இராசிபுரத்தில் அமைந்துள்ள முத்தாயம்மாள் நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இம்முகாமில் 8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகளும், தையற்பயிற்சி, நர்சிங்பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவர்களும் கலந்து கொண்டுள்ளனர். இம்முகாமில் 130-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் 3,216 வேலை நாடுநர் கலந்து கொண்டனர். மேலும் கலந்து கொண்ட நபர்களில் 763 நபர்கள் பணி வாய்ப்பிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 60 நபர்களுக்கு இன்றைய தினம் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 194 இளைஞர்கள் பணி வாய்ப்புக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் (Shortlisted). www.tnprivatejobs.tn.gov.in என்ற வேலைவாய்ப்பு இணையதளத்தின் வாயிலாக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு தனியார் துறை நிறுவனங்களில் 10,000-க்கு மேற்பட்ட நிறுவனங்கள் 43 துறைகளின் கீழ் பதிவு மேற்கொண்டுள்ளனர். இதில் நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 329 நிறுவனங்கள், 32 துறைகளின் கீழ் பதிவு செய்துள்ளனர். இதுவரை நாமக்கல் மாவட்டத்தில் 16455 வேலைநாடும் இளைஞர்கள் பதிவு செய்துள்ளனர். நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம், மருத்துவப் பணியாளர் தேர்வாணையம், மாவட்ட, மாநில தேர்வு வாரியம் போன்ற தேர்வாணையங்கள் மூலமாக வெளியிடப்படும் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்திட்டத்தின் பதிவு செய்து 5 வருடங்கள் பூர்த்தி அடைந்த பொதுபதிவுதாரர்களுக்கும் வேலைப்பு பதிவு செய்து 1 வருடம் பூர்த்தி அடைந்த மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களுக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. எனவே இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாமினை வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்படுத்தி பயன்பெறுமாறும், மேலும் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். இம்முகாமில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கு.செல்வராசு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பொ.மா.ஷீலா, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் சு.சுதா, கல்லூரி முதல்வர் ஆ.சோமு உட்பட துறைச்சார்ந்த அலுவலர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள், பேராசியர்கள் கலந்து கொண்டனர்.

Similar News