சுதந்திரப் போராட்ட வீரமங்கை வேலு நாச்சியார் பிறந்த நாள்-கரூரில் தவெகவினர் கொண்டாட்டம்.
சுதந்திரப் போராட்ட வீரமங்கை வேலு நாச்சியார் பிறந்த நாள்-கரூரில் தவெகவினர் கொண்டாட்டம்.;
சுதந்திரப் போராட்ட வீரமங்கை வேலு நாச்சியார் பிறந்த நாள்-கரூரில் தவெகவினர் கொண்டாட்டம். 1730 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதியின் மகளாக பிறந்தவர் வேலு நாச்சியார். சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய இந்தியாவின் முதல் பெண் வீரமங்கை என்ற பெயரைப் பெற்றவர் ஆவார். தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவராகவும் உள்ளார். இன்று அவரது 296 வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மேற்கு மாவட்ட தவெக கட்சி அலுவலகத்தில் கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையில் வேலு நாச்சியாரின் திரு உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் கரூர் மேற்கு மாவட்ட அளவிலான பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகளும் மகளிர் அணியினரும் கலந்து கொண்டு வேலு நாச்சியாருக்கு புகழஞ்சலி செலுத்தினர்.