கரூர் அரசு அதிகாரிகளின் பயன்பாட்டுக்காக புதிய ஈப்பு வாகனங்களை வழங்கி வாழ்த்தினார் ஆட்சியர் தங்கவேல்.

கரூர் அரசு அதிகாரிகளின் பயன்பாட்டுக்காக புதிய ஈப்பு வாகனங்களை வழங்கி வாழ்த்தினார் ஆட்சியர் தங்கவேல்.;

Update: 2026-01-08 14:10 GMT
கரூர் அரசு அதிகாரிகளின் பயன்பாட்டுக்காக புதிய ஈப்பு வாகனங்களை வழங்கி வாழ்த்தினார் ஆட்சியர் தங்கவேல். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கரூர் மாவட்டத்தில் பணிபுரியும் அரசு அதிகாரிகளின் பயன்பாட்டிற்காக தமிழக அரசு வழங்கிய புதிய ஈப்பு வாகனங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல். இதில் அரவக்குறிச்சி தனி வட்டாட்சியர், கரூர் வட்டாட்சியர், கரூர் தனி வட்டாட்சியர், குளித்தலை தனி வட்டாட்சியர், குளித்தலை சார் ஆட்சியர் ஆகியோருக்கு தனித்தனியாக மொத்தம் ஐந்து வாகனங்களுக்கு உண்டான சாவிகளை கொடுத்து வாகனத்தை பாதுகாப்பாக ஓட்ட வேண்டும் என ஆலோசனை வழங்கினார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், கரூர் வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Similar News