ராமநாதபுரம் திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் செய்தியாளர் சந்திப்பு

பாஜக அரசு கண்டித்து நாளை நடக்கவிருக்கும் உண்ணாவிரதம் தொடர்பாக திருவாடானை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செய்தியாளர்களை சந்தித்தார்.;

Update: 2026-01-10 12:18 GMT
ராமநாதபுரம் மாவட்டம்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தினை அழிக்கும் விதமாக தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் பெயரை நீக்கி, இந்த திட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் நோக்கில் திருத்தம் செய்த மத்திய பாஜக அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டுவரும் நிலையில் அதன் விபரங்களை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் நாளை இராமநாதபுரம் அரண்மனை வாசல் முன்பு உண்ணாவிரதம் நடத்தவிருப்பதாகவும், இதில் பாஜக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் இதனை மக்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் உண்ணாவிரதம் நடத்தப்படும் என இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தாலுகா நகர் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இராம. கருமாணிக்கம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் இராஜாராம்பாண்டியன், ஜோதிபாலன், மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Similar News