தோகைமலையில் விசிக கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
கிழக்கு ஒன்றிய செயலாளர் பிச்சைமுத்து தலைமை வகித்தார்;
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குளித்தலை சட்டமன்ற தொகுதி மாவட்டம் சார்பில் தோகைமலை கிழக்கு ஒன்றியத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் பி எல் ஏ 2 ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தோகைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் பிச்சை முத்து தலைமை வகித்தார். செல்வகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார். பாபு கண்ணன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக குளித்தலை சட்டமன்றத் தொகுதி மாவட்ட செயலாளர் குறிச்சி சக்திவேல் என்கிற ஆற்றல் அரசு, பெரம்பலூர் மண்டல செயலாளர் வழக்கறிஞர் ஸ்டாலின், மண்டல துணைச் செயலாளர் பெரியசாமி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலியமூர்த்தி, ரகுநாதன் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் ராம்கி, வேல்முருகன், முகாம் செயலாளர் கருப்பையா, பாரதி, மதன்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்