கரூர் மாவட்ட திமுக சார்பில் கலைஞர் அறிவாலயத்தில் திராவிட பொங்கல் விழா.

கரூர் மாவட்ட திமுக சார்பில் கலைஞர் அறிவாலயத்தில் திராவிட பொங்கல் விழா.;

Update: 2026-01-13 09:37 GMT
கரூர் மாவட்ட திமுக சார்பில் கலைஞர் அறிவாலயத்தில் திராவிட பொங்கல் விழா. தமிழர் திருநாளாம் தைத்திருநாளை தமிழர்கள் ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் திமுக. சார்பில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதன் அடிப்படையில் கரூர் மாவட்ட திமுக கட்சி அலுவலகமான அறிவாலயம் முன்பு வண்ண கோலம் வரைந்து பொங்கல் படையல் இட்டு, கரும்பு மஞ்சள் உள்ளிட்ட விளைபொருட்களை வைத்து சூரியனை கும்பிட்டு தீப ஆராதணை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட அளவிலான பல்வேறு அணிகளைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சமத்துவம், ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் பொங்கல் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர். தமிழர் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டை எடுத்துக்காட்டும் வகையில் பாரம்பரிய உடைகள் அணிந்து, இனிப்பு பொங்கல் பகிர்ந்து மகிழ்ந்தனர். சமூகத்தில் அனைவரும் சமம் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் இந்த திராவிட பொங்கல் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.

Similar News