நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மாட்டு வண்டியில் பயணித்து அலுவலர்களுடன் பொங்கல் வைத்து,அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில், பொங்கல் விழா-2026-னை முன்னிட்டு, அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று, பொங்கல் வைத்து பொங்கல் விழாவினை கொண்டாடினார்கள்.;
தமிழ்நாட்டில் தமிழர்களின் மரபு, பண்பாடு, கலாச்சார வழியில் ஒவ்வொரு ஆண்டும் தைத் திருநாள், தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் விழா சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உழவர்களின் உழைப்பை போற்றும் வகையில் தைத் திருநாள் பொங்கல் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் தலைமையில், பொங்கல் விழாவை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர். மேலும் நமது பாரம்பரிய தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றும் வகையில், மாவட்ட ஆட்சியர் மாட்டு வண்டியில் பயணித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை புரிந்தார்.தொடர்ந்து, பொங்கல் விழாவை முன்னிட்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பெண் கல்வி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைக்கும் வகையில் கோலப்போட்டி, லெமன் ஸ்பூன், உரி அடித்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுப்பொருட்களை வழங்கி, அனைவருக்கும் தனது பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.க.சரவணன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கு.செல்வராசு, இணை இயக்குநர் (வேளாண்மை) சு.மல்லிகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் சந்தியா (பொது), மா.பரமேஸ்வரன் (சத்துணவு), க.இராமச்சந்திரன் (வேளாண்மை), தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) .சு.சுந்தரராஜன், மாவட்ட சமூக நல அலுவலர் தி.காயத்திரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தே.ராம்குமார், மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் திருமதி எஸ்.கோகிலா, உதவி ஆணையர் (கலால்) திரு.என்.எஸ்.ராஜ்குமார், தொழிலாளர் உதவி ஆணையார் (ச.பா.தி) கே.பி.இந்தியா மாவட்ட சுற்றுலா அலுவலர் மு.அபராஜிதன், ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளர் .சி.ஆர்.ராஜேஸ்கண்ணன், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.