கரூர் மாவட்ட அதிமுக சார்பில் பெரியார் நகர் பகுதியில் பொங்கல் வைத்து வழிபட்டு விளையாட்டு போட்டியை முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் துவங்கி வைத்து பரிசுகள் வழங்கினார்.
கரூர் மாவட்ட அதிமுக சார்பில் பெரியார் நகர் பகுதியில் பொங்கல் வைத்து வழிபட்டு விளையாட்டு போட்டியை முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் துவங்கி வைத்து பரிசுகள் வழங்கினார்.;
கரூர் மாவட்ட அதிமுக சார்பில் பெரியார் நகர் பகுதியில் பொங்கல் வைத்து வழிபட்டு விளையாட்டு போட்டியை முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் துவங்கி வைத்து பரிசுகள் வழங்கினார். கரூர் ஆண்டாங் கோயில் பெரியார் நகர் பகுதியில் கரூர் மாவட்ட அதிமுக சார்பில் நேற்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினார். தொடர்ந்து பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது இதில் பானை உடைத்தல், கோலப்போட்டி, தர்மபதம் என்ற பெயரில் பரமபதம் விளையாட்டு அதிமுக ஆட்சியில் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட நலத்திட்டங்கள் குறித்து இடம்பெற்று இருந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். முன்னதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மாட்டு வண்டியை ஒட்டி ஊர்வலமாக வந்தார். இந்நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.