புதுக்கோட்டையில் மாவட்ட கழகம் சார்பில் சிறப்பு பரிசுகள்
சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் மற்றும் காளைகளின் உரிமையாளருக்கும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட கழகம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.;
தமிழ் புத்தாண்டு மற்றும் திராவிட பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் குன்றாண்டார்கோவில் மத்திய ஒன்றியம் மங்கதேவன்பட்டியில் நடைபெற்ற மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் தலைமையேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் மற்றும் காளைகளின் உரிமையாளருக்கும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட கழகம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. ஒன்றிய செயலாளர் C.சண்முகம், கழக விவாசாய தொழிலாளரணி துணை செயலாளரும் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவருமான KRN.போஸ், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் T.செல்வம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளரும் திருவிடைமருத்தூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளருமான முனைவர் செ.குறிஞ்சிவாணன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கோட்டாட்சியர் வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் ஊர் மணியார் உள்ளிட்ட போட்டி ஒருங்கிணைப்பு குழுவினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.