கரூரில், கல்வித்துறை சார்ந்த கேள்விக்கு விடை அளித்த மாணவிக்கு புத்தகம் பரிசளித்து வாழ்த்து தெரிவித்தார் செந்தில் பாலாஜி.

கரூரில், கல்வித்துறை சார்ந்த கேள்விக்கு விடை அளித்த மாணவிக்கு புத்தகம் பரிசளித்து வாழ்த்து தெரிவித்தார் செந்தில் பாலாஜி.;

Update: 2026-01-19 11:46 GMT
கரூரில், கல்வித்துறை சார்ந்த கேள்விக்கு விடை அளித்த மாணவிக்கு புத்தகம் பரிசளித்து வாழ்த்து தெரிவித்தார் செந்தில் பாலாஜி. கரூர் அடுத்த தாந்தோணி மலை அரசு கலை அறிவியல் கல்லூரியின் கூட்டரங்கில் தமிழக அரசின் "உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ்"மாணாக்கர்களுக்கு 1,040-மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் மாணிக்கம் இளங்கோ சிவகாமசுந்தரி கல்லூரியின் முதல்வர் மற்றும் கல்லூரியில் பயிலும் மாணாக்கர்கள் இருபால் பேராசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும் கல்லூரியின் முன்னாள் மாணவருமான செந்தில் பாலாஜி அவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பிறகு மாணாக்கர்களிடையே உரையாற்றிய செந்தில் பாலாஜி மாணாக்கர்களின் திறன் அறிவதற்காக கல்வித்துறை தொடர்பான இரண்டு கேள்விகளை எழுப்பினார். அதில், மாநிலம் மற்றும் தேசிய அளவில் உயர்கல்வி பயிலும் மாணக்கர்களின் சதவீதம் எத்தனை என்ற கேள்வி எழுப்பினர். அதற்கு ஒரு மாணவி மாநில அளவில் 47 சதவிகிதமும் தேசிய அளவில் 78 சதவிகிதம் என சரியான விடை அளித்தார். தொடர்ந்து தமிழக பட்ஜெட்டில் நடப்பாண்டு பள்ளி கல்வித் துறைக்கு ஒதுக்கிய நிதி எவ்வளவு? இந்தக் கேள்விக்கு மாணாக்கர்கள் முன் பின் பதில் அளித்ததால் இதற்கு செந்தில் பாலாஜி பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வித் துறைக்கு மொத்தம் 55,261 கோடி ஒதுக்கி உள்ளது எனவும் இதில் பள்ளிக்கல்வித்துறைக்கு மட்டும் 46 ஆயிரம் கோடி மாநில அரசு ஒதுக்கி உள்ளது. அதே சமயம் ஒன்றிய அரசு இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களுக்கு 78 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கி உள்ளது. இதன் மூலம் தமிழக முதலமைச்சர் பள்ளி கல்வித்துறைக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை உணர்ந்து மாணாக்கர்கள் கல்வி பயிலும் காலத்தில் தங்களது திறன்களை வெளிப்படுத்தி வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்று கூறினார்.

Similar News