தோகைமலையில் கருவறை சிலை குளத்திலிருந்து மீட்பு
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை;
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலையில் உள்ள மலை உச்சியில் பாலதண்டாயுதபாணி திருக்கோவில் உள்ளது. இங்குள்ள கருவறை சிலை கடந்த வருடம் அர்ச்சகர் மூலம் மாற்றப்பட்டு புதிய சிலை வைக்கப்பட்டது குறித்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து சங்கிலி முத்து அளித்த புகாரின் பேரில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மூலம் மலை உச்சியில் உள்ள குளத்தில் இருந்து நேற்று சிலை மீட்கப்பட்டு பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்தனர். அதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.