குளித்தலையில் பெயர் விலாசம் தெரியாத ஆண் நபர் இறந்த நிலையில் மீட்பு

குளித்தலை போலீசார் விசாரணை;

Update: 2026-01-21 17:48 GMT
கரூர் மாவட்டம் குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அருகே உள்ள தனியார் கட்டிடம் முன்பு 55 வயது மதிக்கத்தக்க பெயர் விலாசம் தெரியாத ஆண் நபர் இன்று அதிகாலை தரையில் படுத்திருந்தும் பிறகு அங்கேயே சுற்றி திரிந்துள்ளார். அதன் பிறகு மதியம் வரை அங்கிருந்த கட்டிடத்தில் படியில் அமர்ந்து இருந்துள்ளார். அதன் பிறகு மாலை நேரத்தில் பார்த்தபோது தலை பின்புறம் மேல் நோக்கி சாய்ந்தவாறு இறந்து அமர்ந்த நிலையில் இருந்துள்ளார். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெயர் விலாசம் தெரியாத ஆண் நபரின் உடலை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்கிற்கு கொண்டு சென்றனர். மேலும் இறந்தவர் யார் என்பது குறித்து குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News