முதுமலை புலிகள் காப்பகம் வெளி மண்டலத்திற்குட்பட்ட மாயார் சாலையில் கம்பீரமாக சாலையை கடந்து சென்ற புலி ...
வீடியோ வைரல்...;
நீலகிரி முதுமலை புலிகள் காப்பகம் வெளி மண்டலத்திற்குட்பட்ட மாயார் சாலையில் கம்பீரமாக சாலையை கடந்து சென்ற புலி ... வீடியோ வைரல்... நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வெளி மண்டல பகுதிகளான மாயார், சிங்காரா, மசினகுடி, வாழைத்தோட்டம், மாயார் உள்ளிட்ட வன பகுதிகளின் சாலையோரங்களில் புலிகளின் நடமாட்டம் அண்மைக்காலமாக அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் மசினகுடியில் இருந்து மாயார் செல்லும் சாலையில் இன்று கம்பீரமாக புலி ஒன்று சாலையை கடந்து சென்றது. இதனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டுனர் ஒருவர் தங்களது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதி சாலையோரங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால் வாகன ஓட்டுனர்கள் கவனமுடன் வாகனங்களை இயக்க வேண்டும் எனவும், வனவிலங்குகளை எவ்வித தொந்தரவும் செய்யக்கூடாது என அறிவுறுத்தியுள்ளனர்.