நங்கவரத்தில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனைக் கூட்டம்
குளித்தலை ஒன்றியம் மற்றும் நங்கவரம் பேரூர் நிர்வாகிகள் பங்கேற்றனர்;
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் பகுதியில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனைக் கூட்டம் ஈரோடு மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி துணை தலைவர் பசுபதி செந்தில், கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவர் கார்த்தி, இணை செயலாளர் வாலியம்பட்டி மோகன், செயலாளர் கார்மேகம் ஆகியோர் தலைமையில் இன்று நடைபெற்றது. நங்கவரம் பேரூர் செயலாளர் திருப்பதி முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் அதிமுக ஒன்றிய நிர்வாகிகள், நங்கவரம் பேரூர் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்