போஸ் பிறந்த நாளில் இரண்டு கடையில் இலவச டீ வழங்கிய தியாகிகள் வாரிசுகள்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளில் குமாரபாளையம் சுதந்திர போராட்ட தியாகிகள் வாரிசுகள் சங்கம் சார்பில் இரண்டு டீக்கடையில் நாள் முழுதும் இலவச டீ வழங்கினர்.;
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 129 ஆவது பிறந்தநாள் விழா நாராயண நகர் நகராட்சி பள்ளியில் தலைமை ஆசிரியர் பாரதி தலைமையில் கொண்டாடப்பட்டது சிறப்பு அழைப்பாளர்களாக சுதந்திர போராட்ட வீரர் வாரிசுகள் பன்னீர்செல்வம், யுவராஜ், தாமரை செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவில் எட்டாம் வகுப்பு மாணவிகள் இருவர் நேதாஜி பற்றிய வாழ்க்கை வரலாறு குறித்து சொற்பொழிவாற்றினார்கள். இவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ, மாணவியர் அனைவருக்கும் நேதாஜி பேட்ச் வழங்கப்பட்டது. குமாரபாளையம் அப்பன் பங்களா அருகில் மற்றும் பெரிய மாரியம்மன் கோவில் எதிரில் உள்ள இரண்டு டீக்கடையில் காலை முதல் மாலை வரை பொதுமக்களுக்கு இலவசமாக டீ வழங்கப்பட்டது இதனை சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகள் சங்கம் சார்பில் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை பன்னீர்செல்வம் மற்றும் யுவராஜ் செய்தனர்,