ஜன. 31ல் நடக்கும் ஜல்லிக்கட்டு இடத்தினை அதிகாரிகள் ஆய்வு

குமாரபாளையத்தில் ஜன.31ல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்தினை ஆர்.டி.ஓ. உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்;

Update: 2026-01-24 16:24 GMT
குமாரபாளையம் சேலம் பைபாஸ் சாலையில் ,தனியார் கல்லூரியின் பின்புறம் குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஒன்பதாம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி ஜன. 31ல் நடைபெற உள்ளது. 500-க்கும் மேற்பட்ட மாடுகள் 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் உள்ளிட்டோர் இந்த போட்டியில் பங்கேற்க உள்ள நிலையில், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை காண்பதற்காக வாடிவாசல், பார்வையாளர்கள் அமரும் இடம், தற்காலிக முதலுதவி சிகிச்சை செய்யும் வகையில் மருத்துவ முகாம் உள்ளிட்டவை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு பணிகள் குறித்து, திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் லெனின், தாசில்தார் பிரகாஷ் ,இன்ஸ்பெக்டர் தவமணி உள்ளிட்டோர் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் மாடுகள் அதிகம் உள்ள பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பை விழா குழுவினர் ஏற்படுத்த வேண்டும், தேவையான குடிநீர் வசதி மாடுபிடி வீரர்களுக்கும்,பொதுமக்களுக்கும் கிடைக்க பெறும் வகையில் செயல்பட வேண்டுமென ஜல்லிக்கட்டு நிர்வாகிகளுக்கு அரசு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.தீயணைப்பு துறை மற்றும் மருத்துவக் குழு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Similar News