அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடந்து வருகிறது.;
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் ஆறாம் நாள் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் முதல்வர் (பொ) சரவணாதேவி தலைமையில் நடந்தது திட்ட அலுவலர் ரமேஷ் குமார் வரவேற்றார். நூலகத்தின் பயன்பாடுகள் குறித்து நடந்த சிறப்பு நிகழ்ச்சியில், குமாரபாளையம் கிளை நூலக, நூலகர் மாரியாயி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, , நூலகத்தின் முக்கியத்துவம், நூல்களைப் பயன்படுத்தும் முறைகள், அறிவை வளர்க்க நூலகம் வகிக்கும் பங்கு ஆகியவை குறித்து பேசினார். குமாரபாளையம் அரசு மருத்துவமனை, உதவி சித்த மருத்துவ அலுவலர் சுகந்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, சித்த மருத்துவத்தின் பயன்கள் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்தும், சித்த மருத்துவத்தின் அடிப்படை கோட்பாடுகள், நோய் தடுப்பு முறைகள், பாரம்பரிய மருத்துவத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார். மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் 50 மரக்கன்றுகளை நட்டனர். குமாரபாளையம், வாசுகி நகர், தர்மத்தோப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை நாகரத்தினம் பங்கேற்று மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்தார்.