ராசிபுரம் அடுத்த சரஸ்வதி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் தனியார் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சியில் இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்பு...

ராசிபுரம் அடுத்த சரஸ்வதி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் தனியார் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சியில் இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்பு...;

Update: 2026-01-24 17:01 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆயில்பட்டி பகுதியில் சரஸ்வதி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் இஸ்ரோல் முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்ந்து,அவர் தனது இஸ்ரோ வாழ்வின் பயணங்களை மாணவ மாணவிகளிடம் பேசினார். தொடர்ந்து கடந்த ஆண்டு தேர்வில் பாடப்பிரிவுகளில் முழு மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவிகள் அவர்களை சிறப்பாக ஊக்குவித்த ஆசிரியர்களுக்கு தங்க நாணயங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். பள்ளி நிர்வாகத்தை சிறப்பாக வழி நடத்தியதாக தலைமை ஆசிரியர் இஸ்மாயில் என்பவருக்கு 1 பவுன் தங்க நாணயத்தை வழங்கியது குறிப்பிடத்தக்கது.. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், பாடப்பிரிவுகளில் முழுப்ப மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள் ஆசிரியர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்குவது வரவேற்கத்தக்க ஒன்று. PSLV-C62 ஏவுகணை தோல்வியை குறித்து கேட்டபோது, திட எரிபொருள் திரவத்தின் 3வது இடத்தில் தவறு உள்ளது. இதற்கு முன்னால் தோல்வி ஏற்பட்டுள்ளது, தற்காலிகமாக பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது அடுத்து ஏவுகணை முழுமையாக தெரிந்துதான் செய்ய வேண்டும்,தோல்வியை கண்டு துவண்டு போக அவசியமில்லை. இதனுடைய பாதிப்பு அடுத்த ஏவுகணையில் இருக்கிறதா என்பதை தெரிந்து செல்ல வேண்டும். உலக அளவில் எல்லா பக்கமும் நடக்கிறது தான் காலதாமதம் முக்கியமில்லை தோல்வியை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது அதற்கான தேவையான ஆராய்ச்சிகள், தகவல்கள் பற்றி புரிந்துணர்வு தேவை. 2020 என்பதை இலக்காக வைத்துக் கொண்டு நாடு முன்னேறியது அடுத்த இலக்காக 2047 எப்படி என்பதை நாம் திட்டமிட வேண்டும் என முன்னாள் இஸ்ரோ இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை இவ்வாறு பேட்டியளித்தார். உடன் பள்ளி சேர்மன் கனகவேல் தாளாளர் தவமணி செயலாளர் திவாகர் மற்றும் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்...

Similar News