வநேத்ரா குழுமத்தின் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சியில்) இராசிபுரம், முன்னாள் மாணவர் – விண்வெளி விஞ்ஞானி சிறப்பு கருத்தரங்கு..

வநேத்ரா குழுமத்தின் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சியில்) இராசிபுரம், முன்னாள் மாணவர் – விண்வெளி விஞ்ஞானி சிறப்பு கருத்தரங்கு..;

Update: 2026-01-24 15:28 GMT
வநேத்ரா குழுமத்தின் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சியில்) இராசிபுரம் – முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் மின்னணு மற்றும் தொடர்பியல் துறை இணைந்து, “ALUMNI INSIGHT SESSION – மேம்பட்ட செயற்கைக்கோள் தொழில்நுட்பமும் அதன் பயன்பாடுகளும்” என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு 24.01.2026 (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு B-Block மாநாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக, இக்கல்லூரியின் முன்னாள் மாணவரும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), பெங்களூருவில் பணியாற்றும் டாக்டர் R. செந்தில்குமார் (1995–1998), Scientist / Engineer-SF, Deputy Project Director (DPD), Gaganyaan – Orbital Module Project (OMP) கலந்துகொண்டு, “இந்த கருத்தரங்கின் தொடக்கமாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) நடத்தும் ‘ISRO START 2026’ திட்டத்தின் அமர்வை தொடக்கி வைத்து, அதன் நோக்கங்கள் மற்றும் பயன்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். நிகழ்ச்சியில் ஜே. நர்மதா (III-IOT) அவர்களின் வரவேற்புரை இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து டாக்டர் R. கௌரிசங்கர், COE, MCAS அவர்களின் அறிமுக உரையும், கல்லூரியின் முதல்வர் டாக்டர் S. P. விஜய்குமார்அவர்களின் தலைமையுரையும் வழங்கப்பட்டன. துறைத்தலைவர் திரு. S. அருள்மணி மற்றும் முன்னாள் மற்றும் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர், Mrs. M. சத்யா அவர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இறுதியாக R. ரம்யா (III-EC) அவர்களின் நன்றியுரை வழங்கப்பட்டது. இந்தநிகழ்ச்சியில் மின்னணு மற்றும் தொடர்பியல், இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் புள்ளியியல் துறைகளில் பணியாற்றும் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அனைத்து மாணவ மற்றும் மாணவிகளும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சி மாணவர்களுக்கு விண்வெளி தொழில்நுட்பம் குறித்த தொழில் வாய்ப்புகள் மற்றும் நடைமுறை அறிவை வழங்கி, முன்னாள் மாணவர்கள் மற்றும் கல்லூரி இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

Similar News