மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திய முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர்.

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திய முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர்.;

Update: 2026-01-25 12:06 GMT
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திய முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர். தமிழகத்தில் இந்தி மொழியை கட்டாயமாக்க கடந்த கால காங்கிரஸ் அரசு முயற்சி மேற்கொண்ட போது, தமிழகத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக தமிழ் மொழியைக் காப்பதற்கு பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. இதன் உச்சகட்டமாக தமிழின்பால் உள்ள பற்று காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக தீக்குளிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இந்தியாவே அதிர்ச்சிக்கு உண்டானது. இந்த மொழி போரில் உயிரிழந்த தமிழர்களுக்கு ஆண்டுதோறும் அரசியல் கட்சியினர் வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர். இதன் அடிப்படையில் இன்று கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மொழிப்போரில் தன் உயிரை மாய்த்துக்கொண்ட தியாகிகளின் திருவுருவ படங்களுக்கு மலர்மாலை அணிவித்து மலர்கள் தூவி வீரவணக்கம் செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அளவிலான பல்வேறு அணிகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மறைந்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

Similar News