கடவூர் அருகே தொண்டமாங்கிணம் கிராமம் ஆதிசுயம்பீஸ்வரர் கோவிலில் தூய்மை பணி
ஆதிசுயம்பீஸ்வரர் கோவிலை சுற்றி சிவ கைலாய உழவார திருப்பணிகள் சார்பாக தூய்மை பணிகளை செய்தனர்.;
கரூர் மாவட்டம்,கடவூர் வட்டாரத்திற்கு உட்பட்ட தொண்டமாங்கிணம் பகுதியில் பழமை வாய்ந்த ஆதிசுயம்பீஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு பிரதோசம் நிகழ்ச்சியின் போதும் கோவிலுக்கு வருகின்றன சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அண்ணதானத்துடன் சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர். இதேபோல் ஆண்டுகள் தோறும் நடைபெறும் மகாசிவராத்திரி திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கு பூஜைகளும், பல்வேறு பூஜைகளும் நடைபெற்று வருகிறது. இதேபோல் வருகின்ற 15.2.2026 அன்று மகா சிவன்ராத்திரி திருவிழா மிகப்பிரமாண்டமாக நடத்துவதற்கு கோவில் நிர்வாகம் சார்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனர் இதனை அறிந்த திருச்சி மாவட்ட சிவ கைலாய உழவாரத் திருப்பணி அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் அதன் சார்ந்த பக்தர்கள் தொண்டமாங்கிணம் பகுதியில் பலமை வாய்ந்த ஆதிசுயம்பீஸ்வரர் கோவிலில் தூய்மை பணிகளை செய்வதற்கு முடிவு செய்தனர். அதனை தொடர்ந்து கோவிலை சுற்றி தூய்மை பணிகளை செய்து வழிபட்டனர். இதில் தொண்டமாங்கிணம் பகுதியில் பலமை வாய்ந்த ஆதிசுயம்பீஸ்வரர் கோவில் நிர்வாகிகள் மற்றும் திருச்சி மாவட்ட சிவ கைலாய உழவாரத் திருப்பணி அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.