ஸ்ரீ நரசிங்க பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம், நடைபெற்றது

ஸ்ரீ நரசிங்க பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம், நடைபெற்றது;

Update: 2026-01-25 15:06 GMT
புளியங்குடி ஸ்ரீ நரசிங்க பெருமாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம், நடைபெற்றது அதனைத் தொடர்ந்து வருஷாபிஷேகம் நடைபெற்று வந்தது இந்நிலையில் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடந்தது இதில் கும்ப பூஜை ஹோம பூஜையுடன் சுவாமிக்கு பல்வேறு விதமான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் நடைபெற்றது அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது வருஷாபிஷேக பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் இவ்விழாவில் முன்னாள் நகரமன்ற தலைவர் வெங்கட்ராமன்சாமி, புளியங்குடி நகராட்சி ஆணையாளர் நாகராஜ், பதினெட்டாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் செந்தாமரை, பாலகுமாரன், கோமதி விநாயகம், அன்னதானம் கட்டளைதாரர் பால விநாயகம், பார்வதி கௌசல்யா, பவ்யா, குடும்பத்தினர் கோவில் அர்ச்சகர் சந்தோஷ், விஜயன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News