ராமநாதபுரம் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் பொதுக்கூட்டம் நடைபெற்றது

தியாகி வ.உ. சிதம்பரம் பிள்ளை முழு உருவ வெண்கல சிலை அமைக்க வேண்டும் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் பொதுக்கூட்டத்தில் தீர்மானம்;

Update: 2026-01-27 01:27 GMT
ராமநாதபுரத்தில் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் அண்ணா சரவணன் தலைமை வகித்தார். மாநில இளைஞரணி தலைவர் ராஜா, மாநில அமைப்பு செயலாளர் பந்தல் ராஜா, மாநில விவசாய அணி செயலாளர் ராஜசேகரன், மாவட்டத் தலைவர் அஜித்குமார், மாவட்டச் செயலாளர் மனோஜ் குமார், மாவட்ட பொருளாளர் மணிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் மதிவாணன் வரவேற்புரை ஆற்றினார். வர்த்தகப்பிரிவு பொருளாளர் மணி, நகர் தலைவர் சுந்தர்ராஜன், மாவட்ட கவுரவத் தலைவர் லால்பகதூர் முருகன், மகளிர் அணி தலைவர் தமிழரசி, மாவட்ட இளைஞரணி தலைவர் பாலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ராமநாதபுரத்தில் வெள்ளாளர் சமுதாய உறவினர் தானமாக கொடுத்த சிதம்பரம் பிள்ளை ஊரணியில் தியாகி வ.உ.சிதம்பரம் பிள்ளை முழு உருவ வெண்கல சிலை அமைக்க வேண்டும், வேளாளர் அரசாணை ரத்து செய்ய வேண்டும், ராமேஸ்வரம் போன்ற திருத்தலங்களில் அறநிலையத்துறையில் கோவில் நிர்வாகத்தில் அங்கீகாரம் வேண்டும், ராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் வேளாளர் சமுதாயத்திற்கு பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் கவுன்சிலர் வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும் அதேபோல் சட்டமன்ற தொகுதிகளிலும் நிறுத்த வேண்டும். ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்திற்கு தியாகி தளவாய் தாண்டவராய பிள்ளை பெயர் சூட்ட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சாயல்குடி, முதுகுளத்தூர், கீழக்கரை, உத்தரகோசமங்கை, தொருவளூர், வலசை, உச்சிப்புளி, திருவாடானை, மஞ்சக் கொல்லை, மட்டியரேந்தல், பாம்பன், கமுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News