மிலாடி நபி 05.09.2025 அன்று ஒரு நாள் மட்டும் (FL 1) மற்றும் FL 2 / FL 3 / FL 3A / FL 3AA மற்றும் FL 11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை தற்காலிகமாக மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்ப

மிலாடி நபி 05.09.2025 அன்று ஒரு நாள் மட்டும் (FL 1) மற்றும் FL 2 / FL 3 / FL 3A / FL 3AA மற்றும் FL 11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை தற்காலிகமாக மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப.,அவர்கள் தகவல்;

Update: 2025-09-03 14:33 GMT
விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் (FL 1) மற்றும் FL 2 / FL 3 / FL 3A / FL 3AA மற்றும் FL 11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை, 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981-ன்படி, நபிகள் நாயகம் பிறந்த நாளான (மிலாடி நபி) 05.09.2025 (வெள்ளிக்;கிழமை) அன்று தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் (FL 1) மற்றும் FL 2 / FL 3 / FL 3A / FL 3AA மற்றும் FL 11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களின் உரிமதாரர்களின் மீது The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா.,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Similar News