நில அபகரிப்பு வழக்கில் 06 நபர்களுக்கு சிறை
நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 06 நபர்களுக்கு 12 ஆண்டுகள் 03 மாத சிறை தண்டனை மற்றும் தலா ரூ.12,500/- அபராதமும் விதித்து திண்டுக்கல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு;

திண்டுக்கல் மாவட்டம் நகர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2016- ஆம் ஆண்டு அழகேந்திரன் என்பவர் தங்களுடைய இடத்தை வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த மல்லம்மாள்(62) திம்மையன்(65) திண்டுக்கல் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜு(41), கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம்(60) குஜிலியம்பாறை பகுதியைச் சேர்ந்த துரைசாமி(57) மற்றும் திண்டுக்கல் நகர் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன்(69) ஆகியோர்கள் ஏமாற்றி அபகரித்ததாக கொடுத்த புகாரின் அடிப்படையில் மாவட்ட நில அபகரிப்பு குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து 06 நபர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தார்கள். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அறிவுறுத்தலின்படி மாவட்ட நில அபகரிப்பு குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் செந்தில்குமார், நீதிமன்ற தலைமை காவலர் சுதா மற்றும் அரசு வழக்கறிஞர் குமரேசன் சீரிய முயற்சியால் திண்டுக்கல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி அவர்கள் 06 குற்றவாளிகளுக்கும் 12 ஆண்டுகள் 03 மாத சிறை தண்டனை மற்றும் தலா ரூ.12,500/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.