திருக்குறள் பயிற்சி வகுப்பு 09.08.2025 முதல் வாரந்தோறும் சனிக்கிழமையில் நடைபெறவுள்ளதால் ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆர்வமுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் திருக்குறள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், பயிற்சியின் இறுதி நாளில் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.;
பெரம்பலூர் மாவட்டம் திருக்குறள் பயிற்சி வகுப்பு 09.08.2025 முதல் வாரந்தோறும் சனிக்கிழமையில் நடைபெறவுள்ளதால் ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளார். கன்னியாக்குமரி மாவட்டத்தில் 31.12.2024 அன்று நடைபெற்ற திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் திருக்குறளில் ஆர்வமும், புலமையும் மிக்க ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் தேர்வுசெய்யப்பட்டு, அவர்களுக்குப் பயிற்சி வழங்கி மாவட்டந்தோறும் தொடர் பயிலரங்குகள், பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் எனவும், ‘திருக்குறள் திருப்பணிகள்’ தொடர்ந்து நடைபெறத் திட்டம் வகுக்கப்படும் எனவும் அறிவித்தார்கள். அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட கண்காணிப்புக்குழுவால், பெரம்பலூர் மாவட்டத்தில் திருக்குறள் பயிற்சி வகுப்புகள் இலாடபுரத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியிலும், பாடாலூரில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியிலும் மற்றும் வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப் பள்ளியிலும் 9.08.2025 முதல் வாரந்தோறும் சனிக்கிழமையில் முற்பகல் 10 மணி முதல் 12.30 மணி வரை 30 வாரங்கள் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் ஆர்வமுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் திருக்குறள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், பயிற்சியின் இறுதி நாளில் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.