தமிழகத்தில் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் 1 லட்சம் பெண் குழந்தைகளை சேர்க்கும் பணி: அண்ணாமலை தொடங்கி வைத்தார்

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நூற்றாண்டு விழா தமிழக பாஜக சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது, தமிழகத்தில் ஒரு லட்சம் பெண் குழந்தைகள் ‘செல்வ மகள் சேமிப்பு’ திட்டத்தில் இணைக்கும் பணியை அண்ணாமலை தொடங்கி வைத்தார்.

Update: 2024-12-26 07:21 GMT
மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்த தின நூற்றாண்டு விழா சென்னை அடையாறில் நேற்று கொண்டாடப்பட்டது. பாஜக சட்டப்பேரவை குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் மாநில தலைவர் தமிழிசை, தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா, முன்னாள் அமைச்சர் ஹெச்.வி.ஹண்டே, நடிகர் சரத்குமார், மாநில துணை தலைவர்கள், மாவட்ட தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், வாஜ்பாயின் படத்தை ஹெச்.வி.ஹண்டே திறந்து வைத்து உரை நிகழ்த்தினார். தொடர்ந்து, 1 லட்சம் பெண் குழந்தைகளை ‘செல்வ மகள் சேமிப்பு’ திட்டத்தில் இணைக்கும் பணியை மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்து, முதல் கட்டமாக 10 குழந்தைகளுக்கு பாஜக சார்பில் ஆயிரம் வைப்பு நிதி வைக்கப்பட்டு திட்டத்தில் இணைத்தார்.

Similar News