தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் 1ஏக்கர் ராகி பயிர் சேதம்
தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் 1ஏக்கர் ராகி பயிர் சேதம்;
தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் 1ஏக்கர் ராகி பயிர் சேதம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள ஜீர்கள்ளி வனச்சரகத்துக்குட்பட்ட குருபரகுண்டி கிராமத்தை சேர்ந்தவர் மாதேகவுடா (வயது 49). விவசாயி. இவர் 2 ஏக்கர் தோட்டத்தில் ராகி பயிரிட்டு உள்ளார். நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து 4 காட்டு யானைகள் வெளியேறி மாதேகவுடா தோட்டத்துக்குள் புகுந்தன. பின்னர் அங்கு பயிரிடப்பட்டிருந்த ராகி பயிர்களை தின்றும்,மிதித்தும் யானைகள் சேதப்படுத்தின. பின்னர் அவைகள் மீண்டும் வனப்பகுதிக்கு சென்றுவிட்டன. தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்ததில் 1 ஏக்கர் பரப்பளவிலான ராகி பயிர் சேதமானது. நேற்று காலையில் தோட்டத்துக்கு வந்த மாதேகவுடா காட்டு யானைகளால் சேதப்படுத்தப்பட்ட ராகி பயிரை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், 'காட்டுயானைகளால் சேதப்படுத்தப்படும் பயிர்களுக்கு உண்டான இழப்பீட்டு தொகையை அரசு வழங்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.