தஞ்சாவூரில் டி.என்.பி.எஸ்.சி தொகுதி 1 முதல்நிலைத் தேர்விற்கான மாநில அளவில் இலவச மாதிரித் தேர்வு
மாதிரி தேர்வு;
தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கிவரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக TNPSC & TNUSRB போன்ற போட்டித்தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் அதிக அளவில் பங்கு பெற்று பயனடைந்து வருகின்றனர். தற்போது TNPSC தொகுதி I, IV மற்றும் TNUSRB SI ஆகிய தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி 1 முதல்நிலைத் தேர்விற்கான அறிவிக்கை 01.04.2025 அன்று வெளியிடப்பட்டு, தேர்வு 15.06.2025 அன்று நடைபெற உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. இத்தேர்விற்கு தயாராகி வரும் போட்டித் தேர்வர்கள் பயன்பெறும் வகையில் டி.என்.பி.எஸ்.சி தொகுதி 1 முதல்நிலைத் தேர்விற்கான மாநில அளவில் இலவச மாதிரித் தேர்வு தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் எதிர்வரும் 27.05.2025, 03.06.2025, 07.06.2025 ஆகிய நாட்களில் காலை 10.30 மணி முதல் 01.30 மணி வரை நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி 1 முதல்நிலைத் தேர்விற்கான மாநில அளவிலான இலவச மாதிரித் தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்பு கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 04362-237037 என்ற அலுவலகத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.