பெண் கொலை வழக்கில் ஆயுள் தண்டணை ரூ.1லட்சம் அபராதம்.
பெண் கொலை வழக்கில் ஆயுள் தண்டணை ரூ.1லட்சம் அபராதம்.;
பெண் கொலை வழக்கில் ஆயுள் தண்டணை ரூ.1லட்சம் அபராதம். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுக்கா கள்ளிக்காட்டு தோட்டத்தில் வசித்து வந்தவர் செல்வராஜ், வயது 51 என்பவருக்கும், ஈரோடு மாவட்டம் அவுல்பூந்துறை பகுதியைச் சேர்ந்த சசிகலா வயது 26 என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது., 21.09.2018-ல் கள்ளிக்காட்டு தோட்டத்து வீட்டில் இருந்த போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டு செல்வராஜ் சசிகலாவை கொலை செய்தார். அரவக்குறிச்சி காவல் துறையினர் செல்வராஜ் மீது கொலை வழக்கு பதிவு செய்து மறுநாளே கைது செய்தனர். இவ்வழக்கு கரூர் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று மாலை இவ்வழக்கில் குற்றவாளி செல்வராஜ்க்கு கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், ரூ. 1,00,000/- அபராதமும் அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக 04 வருடம் சிறை தண்டனை விதித்து நீதிபதி இளவழகன் தீர்ப்பு வழங்கினார். செல்வராஜை பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.