கொலை வழக்கில் ஆயுள் தண்டனையுடன் கூடிய 1 மாதம் சிறை
நிலக்கோட்டையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 1 மாதம் சிறை, ரூ.50,500 அபராதம்;
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் கடந்த 2011-ம் ஆண்டு சரவணகுமார் என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் நிலக்கோட்டையை சேர்ந்த மகாலிங்கம் (எ)லிங்கசாமி(52) உள்ளிட்ட 4 பேரை நிலக்கோட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் இன்று திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி அவர்கள், முதல் குற்றவாளி இறந்த நிலையில் 2,3 குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டு 2-ம் குற்றவாளியான மகாலிங்கம் (எ) லிங்கசாமிக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 1 மாதம் சிறை தண்டனையும், ரூ.50,500 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.